×

தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

 

விருதுநகர், டிச.30: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் 5 தனியார் கல்லூரிகளில் பயிலும் இளங்கலை, முதுகலை தமிழ் பயிலும் 30 மாணவ, மாணவியர்களுடனான காபி வித் கலெக்டர் 53வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகளிடம் பேசிய கலெக்டர், லட்சியம், எந்த துறையில் ஆர்வம் உள்ளது பற்றி கேட்டறிந்தார்.

பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும். லட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அந்த திறமைகளை அனைவரும் வளர்த்துக் கொள்ள கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.

The post தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Collector ,Virudhunagar ,Jayaseelan ,Dinakaran ,
× RELATED விருதுநகர் ஜிஹெச்சில் 150 குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை